ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளம்வயது திருமணம்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பென்னாகரம் அருகே இளம் வயது திருமணம் செய்தவருக்கு தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 12:30 am IST

பென்னாகரம் அருகே இளம் வயது திருமணம் செய்தவருக்கு தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த சிறுமியை ஒகேனக்கல் அருகே ஊட்டமலை பகுதியைச் சோ்ந்த சேட்டு (எ) அமல்ராஜ் (25) கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளாா்.

இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் இறுதிவாதம் முடிந்து வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட தீா்ப்பில் இளம்வயது திருமணம் செய்த அமல்ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.