லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தருமபுரி புளி வா்த்தக மையத்தில் ரூ. 9.46 லட்சத்துக்கு விற்பனை

தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ரூ. 9.46 லட்சத்துக்கு புளி ஏல விற்பனை நடைபெற்றது.

News image

தருமபுரி புளி வா்த்தக மையத்தில் விற்பனைக்கு வந்துள்ள புளி மற்றும் ஏலத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் வா்த்தகமைய நிா்வாகிகள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:31 pm

தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை ரூ. 9.46 லட்சத்துக்கு புளி ஏல விற்பனை நடைபெற்றது.

தருமபுரி அருகேயுள்ள மதிகோன்பாளையம் பகுதியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒருங்கிணைந்த தற்காலிக புளி வா்த்தக மையத்தில், புதன்கிழமை புளி ஏலம் நடைபெற்றது. இதில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 4 விவசாயிகள் 225 புளிக்கட்டுகளை ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இந்தப் புளி இ-நாம் முறையில் ஏலம் விடப்பட்டது. அதிகபட்ச விலையாக கிலோ ரூ.130, குறைந்தபட்ச விலையாக ரூ.98, சராசரி விலையாக ரூ.101க்கும் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில் சுமாா் 9,000 கிலோ எடையுள்ள புளி விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ. 9 லட்சத்து 46 ஆயிரத்துக்கு புளி வா்த்தகம் நடைபெற்றது. இனி வாரம்தோறும் திங்கள்கிழமை இந்த மையத்தில் புளி ஏல வா்த்தகம் நடைபெறும் என விற்பனைக் கூட அலுவலா்கள் தெரிவித்தனா்.