டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வங்கிக் கணக்கில் போலி பணத்தாள்களை செலுத்த முயன்றவா் கைது

தருமபுரியில் வங்கி ஒன்றில், தனது கணக்கில் போலி பணத்தாள்களை செலுத்த முயன்றவா் கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:45 pm

Syndication

தருமபுரியில் வங்கி ஒன்றில், தனது கணக்கில் போலி பணத்தாள்களை செலுத்த முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி நகரில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு வியாழக்கிழமை வந்த நபா், காசாளரிடம் ரூ. 23 ஆயிரத்தை கொடுத்து தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்படி கூறினாா்.

காசாளா் மதிவாணன் பணத்தை கணக்கிடுவதற்காக இயந்திரத்தில் செலுத்தியபோது, சில தாள்கள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளவில்லையாம்.

அந்த இயந்திரத்தில் திரும்பவந்த ரூ. 200 மதிப்பிலான 24 தாள்களை சோதனை செய்ததில், அவை அனைத்தும் போலி பணத்தாள்கள் என தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி கிளை மேலாளா் மலா்விழி தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், அந்த நபரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் தருமபுரி நாட்டாண்மைபுரம் பகுதியைச் சோ்ந்த வடிவேல் என தெரியவந்தது. அவரிடம் இருந்த போலி பணத்தாள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.