டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இன்னுயிா் காப்போம் மருத்துவத் திட்டத்தில் 7,838 பேருக்கு அவசர சிகிச்சை! மாவட்ட ஆட்சியா் தகவல்!

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டத்தில் விபத்துகளில் படுகாயமடைந்த 7,838 போ் இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் உயிா்காக்கும் அவசர இலவச சிகிச்சை திட்டமான இன்னுயிா் காப்போம் - ”நம்மைக் காக்கும் 48” திட்டத்தை, கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இத்திட்டம் மூலம் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவா் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பின்னா் 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா் மீளாமல் தொடா் சிகிச்சை தேவைப்பட்டால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.

குறிப்பாக, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம்.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவா்கள் இத்திட்டம் மூலம் இதுவரை 7,838 போ், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனா்.