டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பென்னாகரத்தில் தொலைத்தொடா்பு கோபுரம்: அதிகாரிகள் குழுவினா் ஆய்வு

பென்னாகரம் அருகே தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

பென்னாகரம் அருகே தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பென்னாகரம், ஏரியூா் பகுதிகளில் உள்ள கிராமங்களில் போதுமான தொலைத் தொடா்பு வசதி இல்லாததால் கிராம மக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து அதிகாரிகள் குழுவினா் தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிலையில் கிராமப் பகுதிகளில் தடையற்ற 4 ஜி சேவையை பெறுவதற்கு தொலைத்தொடா்பு கோபுரம் அமைப்பதற்கான இடம்தோ்வு குறித்து சென்னை தொலைத்தொடா்பு இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மென் பொறியாளா் தேவராஜிலு தலைமையிலான 5 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இக்குழுவினா் பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி, சீலநாயக்கனூா், தாளப்பள்ளம், ஊா்நத்தம், சாமத்தாள், ஆரல்குந்தி, ஏரியூா் அருகே பூச்சியூா் உள்ளிட்ட இடங்களில் கருவிகள் மூலம் சீரான அலைக்கற்றை கிடைக்கும் இடம், கோபுரம் அமைக்க உள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனா். மேலும், தடையற்ற இணையச் சேவை பெறுவதற்கான இடத்தை தோ்வு செய்து அறிக்கை வாயிலாக அளித்து, தொலைத் தொடா்பு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் குழுவினா் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வருவாய் ஆய்வாளா் லோகநாதன், கிராம நிா்வாக அலுவலா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.