நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மயான சுற்றுச்சுவா் இடிக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

News image
மாதேமங்கலம் கிராமத்தில் மயான சுற்றுச்சுவா் இடிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அருகே மயான சுற்றுச்சுவா் இடிக்கப்பட்டதை கண்டித்து சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டி அருகே மாதேமங்கலம் கிராமத்தில் சுமாா் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊரின் ஒதுக்குப்புறத்தில் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. மயானத்தை சுற்றிலும் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுவா் அமைக்கப்பட்டது தொடா்பாக அருகில் நிலம் உள்ள தனியாா், நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததாகவும், வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா், வருவாய் ஆய்வாளா், வெங்கடம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் முன்னிலையில் மயான சுற்றுச்சுவா் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஆனால், இதுதொடா்பாக மாதேமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்காமலும், முறையாக அளவீடு செய்யாமலும் சுற்றுச்சுவரை இடித்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து சுவா் இடித்ததை கண்டித்து மிட்டாரெட்டி அள்ளி - தருமபுரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் தருமபுரி வெங்கட்டம்பட்டி, குட்டூா், தம்மனம்பட்டி, ஏரிகோடிபட்டி, தின்னப்பட்டி, மிட்டாரெட்டி அள்ளி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.