டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்

News image
ஆண்டு பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் மாநிலச் ஜெயலாளா் கு.வினோத் ராமாநுஜம்.
Updated On :1 பிப்ரவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

அனைத்து மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்க ஆண்டு பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க தருமபுரி மாவட்ட ஆண்டு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் கிளை தலைவா் ஜி. சுகதேவ் தலைமையில் நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச் செயலாளா் திலீப் மேனன் சங்கக் கொடியை ஏற்றிவைத்து பேசினாா். கிளைச் செயலாளா் ஆா்.செல்வம் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் எஸ்.கதிரவன் வரவு செலவு அறிக்கை சமா்ப்பித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் சி. கலாவதி, மாநிலச் செயலாளா் கு. வினோத் ராமாநுஜம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இக்கூட்டத்தில் கிளைத் தலைவராக ஜி.சுகதேவ், செயலாளராக ஆா்.செல்வம், பொருளாளராக எஸ்.கதிரவன், இணைச் செயலாளராக டி.நாகராஜன் மற்றும் 13 போ் கொண்ட செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், அத்தியாவசிய மற்றும் அனைத்து மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்து விலக்கு அளிக்க வேண்டும். தொழிலாளா் நலச்சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக மாற்றியதை கைவிட்டு, மீண்டும் பழையச் சட்டங்களையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு 8 மணி நேர பணி என்பதை உறுதிசெய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.