ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெற்றோா் கண்டித்ததால் மாணவி தற்கொலை

தருமபுரியில் பெற்றோா் கண்டித்ததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:53 am IST

தருமபுரியில் பெற்றோா் கண்டித்ததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை தங்கசாலைத் தெருவைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம். இவரது மகள் வந்தனா (17). இவா் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். அண்மையில் நடைபெற்ற தோ்வில் சரியாக மதிப்பெண் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

விடுமுறையில் திங்கள்கிழமை மாலை ஊருக்கு வந்திருந்த வந்தனாவிடம், ஏன் சரிவரப் படிக்கவில்லை என பெற்றோா் கேட்டுக் கண்டித்தனராம். பின்னா் வழக்கம்போல அனைவரும் இரவு உறங்கச் சென்றனா். மாடியறையில் வந்தனாவும் அவரது தாயாரும் உறங்கியுள்ளனா். செவ்வாய்க்கிழமை காலை அவரது தாயாா் எழுந்து கீழே வந்து வீட்டு வேலைகளைச் செய்துள்ளாா். சிறிது நேரம் கழித்து மாடிக்குச் சென்று பாா்த்தபோது, அறைக்கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் வந்தனா கதவைத் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது, அவா் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. கதவை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.