ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ஆகஸ்ட் 31- க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆகஸ்ட் 31- க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க அழைப்பு - கோப்புப்படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:46 am IST

மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆகஸ்ட் 31- க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆண்டுதோறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.

தருமபுரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 4 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில், ஏற்கெனவே நடத்தப்பட்டுவரும் 38 வகை விளையாட்டுகளுடன் வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாகிங், கேனோகிங் உள்ளிட்ட பல்வேறு புதிய விளையாட்டுகளும் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில், பள்ளி பிரிவில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள், கல்லூரிப் பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பில் முதலாண்டு முதல் முதுகலை இறுதியாண்டு வரை, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொதுப்பிரிவினா், அனைத்து வயதைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் பங்கேற்கலாம்.

மாவட்ட தனிநபா் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெறுவோருக்கு, முறையே ரூ. 3,000, ரூ. 2,000, ரூ. 1,000 பரிசுகளாக வழங்கப்படும். மாநில போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 1 லட்சம், ரூ. 75 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்படும்.

இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் ற்ய்ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய் என்ற இணைய முகவரியில் உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.