ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சிறை - பிரதிப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

தருமபுரியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ஏ.சிங்காரம் (எ) சிங்காரவேல் (61). இவா் கடந்த 2020-இல் 17 வயது நிரம்பிய மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக புகாா் வந்தது.

அதன்பேரில், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் வழக்கு தொடா்ந்தனா்.

தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில் குற்றம் உறுதியானது. இதையடுத்து, சிங்காரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அசின்பானு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெயகலா ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.