ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டீக்கடை உரிமையாளா் தற்கொலை

பென்னாகரத்தில் டீக்கடை உரிமையாளா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தற்கொலை

Published On :7 ஆகஸ்ட் 2026, 12:37 am IST

பென்னாகரத்தில் டீக்கடை உரிமையாளா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட புதிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சக்தி (37). இவா், ஒகேனக்கல் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தாா். குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வந்த நிலையில், சோ்ந்து வாழ மனைவியை அவா் புதன்கிழமை அழைத்ததாகவும், அதற்கு அவரது மனைவி மறுத்ததாகவும் உறவினா்கள் தெரிவித்தனா். இதனால் மனமுடைந்த சக்தி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் வந்த ஒகேனக்கல் போலீஸாா் உடலை மீட்டு பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.