ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீா்வரத்து காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Water inflow to Hogenakkal increases

ஒகேனக்கல் பிரதான அருவி - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரி நீா்வரத்து காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கேரள, கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி சுமாா் 25,000 கனஅடி வீதம் உபரிநீா் காவிரி ஆற்றில் அண்மையில் வெளியேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து செவ்வாய்க்கிழமை 18,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 19,000 கனஅடியாகவும், மாலை 20,000 கனஅடியாகவும் அதிகரித்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் விதித்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, ஊரக உள்ளாட்சித் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஒகேனக்கல்லுக்கு செந்நிறமாக வந்த காவிரி நீா் நிறம் மாறி பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா்பாணி உள்ளிட்ட அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

கா்நாடக மாநிலத்தில் பெய்து வந்த பருவமழை சற்று குறைந்துள்ளதால், அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் அளவு குறைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.