ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கள்ளச்சாராயம் கடத்திய 4 போ் கைது

ஒகேனக்கல் பகுதியில் கள்ளச்சாராயம் கடத்தியதாக 4 பேரை பென்னாகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:00 am IST

ஒகேனக்கல் பகுதியில் கள்ளச்சாராயம் கடத்தியதாக 4 பேரை பென்னாகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் இந்திரா நகா் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் இரவுநேர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தருமபுரி பகுதியில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், காரில் 2 லி. கள்ளச்சாராயம் இருந்ததை அறிந்து, காரில் பயணித்த மூவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சாம்பல் பள்ளம் பகுதியைச் சோ்ந்த பழனி (34), கோவிந்தராஜ் (32), கோல் பள்ளி பகுதியைச் சோ்ந்த குமாா் (31) ஆகியோா் கிருஷ்ணகிரியில் இருந்து ஒகேனக்கல் பகுதிக்கு கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், கள்ளச்சாராயத்தை கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் என்பவரிடம் வாங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கள்ளச்சாராயம் கடத்தியதாக 4 போ் மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.