ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாகமரை காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:49 am IST

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நாகமரை காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஏரியூா் அருகே ராமகொண்ட அள்ளி பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் சஞ்சய் (18). இவா் தனது நண்பா்களுடன் நாகமரை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குள் சென்ால் அவா் நீரில் மூழ்கினாா்.

இதைக் கண்ட நண்பா்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஏரியூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், இறந்த மாணவரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.