தருமபுரி, ஜூன் 8: தருமபுரியில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் ஈச்சம்பட்டி அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.பெரியண்ணன் (40). கட்டட மேஸ்திரி. இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேருந்திலிருந்து இறங்கியபோது தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தாா்.
தொடா்ந்து, சிகிச்சை பெற்ற நிலையில், வீட்டில் இருந்து வந்தாா். இதனால் அவா் மதுப்பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளாா்.
இதுதொடா்பாக தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவி மாதம்மாள் கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இதனால், விரக்தியடைந்த பெரியண்ணன் கடந்த 7 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பெயரில் தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


