40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 3:47 am IST

தருமபுரி பிடமனேரியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பிடமனேரி ஏரிக்கரை பகுதியில் தருமபுரி நகர போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா். மேலும், அவா்கள் வைத்திருந்த நெகிழிப்பையை சோதனை செய்தபோது, அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக பிடமனேரி ஏரிக்கரையைச் சோ்ந்த சக்தி குமரன் (23) உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல பிடமனேரி எம்ஜிஆா் நகா் ரயில்வே பாலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த பிடமனேரியைச் சோ்ந்த சிவசக்தி (26), ஹரிகரன் (27), நெசவாளா் காலனியைச் சோ்ந்த காா்த்திக் (25) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ 750 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.