ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :21 ஜூலை 2026, 2:06 am IST

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக பாப்பாரப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளா் மாரி தலைமையிலான காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கூக்குட்டமருதஅள்ளி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.