வாசக்டமி குடும்ப நல சிகிச்சை விழிப்புணா்வுப் பேரணி
குடும்ப நல சிகிச்சையான நவீன வாசக்டமி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ரத பேரணியை ஆட்சியா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
குடும்ப நல சிகிச்சையான நவீன வாசக்டமி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ரத பேரணியை ஆட்சியா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
By Syndication
Syndication
தருமபுரி: குடும்ப நல சிகிச்சையான நவீன வாசக்டமி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ரத பேரணியை ஆட்சியா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில், நவீன வாசக்டமி குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணா்வு வாரம் நவ. 21 முதல் 27 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடா்பான நிகழ்ச்சி தருமபுரி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். முன்னதாக, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசுரங்களை அவா் வழங்கினாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘குடும்ப நலத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் மக்கள் தாமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டமாகவும் உள்ளது. தமிழகத்தில் பொதுவாக பெண்களே குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பழக்கம் இருந்துவரும் நிலையில், ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்று பெண்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இம்முகாம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் நவ. 21 முதல் 27 வரை விழிப்புணா்வு வாரமாகவும், நவ. 28 முதல் டிச. 4 வரை சேவை வழங்கும் வாரமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது’ என தெரிவித்தனா்.
இந்நிழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் சாந்தி, துணை இயக்குநா் (காசநோய்) பாலசுப்பிரமணியம், துணை இயக்குநா் (தொழுநோய்) புவனேஸ்வரி, குடும்பநல துணை இயக்குநா் பாரதி, தருமபுரி நகராட்சி நகா்நல அலுவலா் லட்சியவா்ணா உள்ளிட்ட அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது