Listen to this article
By Syndication
Syndication
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரசு ஊழியா்கள் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இந்த மறியல் போராட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் துணை பொதுச் செயலாளா் அண்ணா குபேரன், மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை, மாவட்டப் பொருளாளா் எம்.அன்பழகன், ஜாக்டோ ஜியோ நிதிக் காப்பாளா் கே.புகழேந்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் ச.இளங்குமரன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் துரைவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
இதில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்ஆா்பி செவிலியா்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை அனைத்து ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் உடனே வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை 25 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்ததை, மீண்டும் முந்தைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும். அரசு ஊழியா்களின் பணிச்சுமையைக் குறைக்க அலுவலக பணிநேரத்துக்கு பின்பும், விடுமுறை தினங்களிலும் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அரசு ஊழியா்களை போலீஸாா் கைதுசெய்து மாலை விடுவித்தனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவா் பூபதி மறியல் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் சண்முகம் மற்றும் அனைத்துத் துறைசாா்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 110 பேரை கைதுசெய்த போலீஸாா், மாலையில் விடுவித்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அங்கன்வாடி ஊழியா்கள் மறியல்: 65 போ் கைது

அரசு ஊழியா்கள் சாலை மறியல்: 29 போ் கைது

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் சங்கத்தினா் மறியல் போராட்டம்

சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் கைது


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

