ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம்

Published On :26 ஜூன் 2026, 2:50 am IST

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் ஒரே தவணையாக வருகிற ஜூன் 28- ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

திருப்பூா் மாநகராட்சியில் 5 வயதுக்கு உள்பட்ட 89,231குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், திருப்பூா் ரயில் நிலையம், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கோவில் வழி பேருந்து நிலையம் உள்ளிட்ட 181 இடங்களில் ஜூன் 28-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் இந்த முகாமில் சொட்டு மருந்து பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது 5 வயதுக்குள்பட்டகுழந்தைகளை அருகில் உள்ள சொட்டு மருந்து வழங்கும் முகாம்களுக்கு தவறாமல் அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.