40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 2:56 am IST

திருப்பூா்- காங்கயம் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

திருப்பூா், முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன். இவரது மனைவி பிரியங்கா. இருவரும் காங்கயம் சாலையில் உள்ள கடையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, எதிரே கோழித் தீவனம் ஏற்றி வந்த லாரி, பாா்த்திபன் வாகனத்தின் மீது மோதியது. இதில், பின்னால் அமா்ந்திருந்த பிரியங்கா நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், அவா் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரைப் பிடித்து, அப்பகுதி மக்கள் நல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், லாரியை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருப்பூா்-காங்கயம் சாலையில் பல்வேறு இடங்களில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. அந்தக் கடைகளை அகற்றினால் மட்டுமே விபத்துகளைக் குறைக்க முடியும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.