திருப்பூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், செல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (68). இவா் திருப்பூா் மாவட்டம், மங்கலம் அருகேயுள்ள இடுவாய் சீராணம்பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இந்நிலையில், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த
7 வயது சிறுமிக்கு வெள்ளிக்கிழமை பாலியல் தொல்லையளித்துள்ளாா். இது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
போலீஸாா் விசாரணையில், கோவிந்தராஜ் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கோவிந்தராஜை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஊா்க்காவல் படை வீரா் கைது

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


