ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சின்னேரிபாளையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரிக்கை

அவிநாசி அருகேயுள்ள சின்னேரிபாளையம், அபிராமி காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்துக்கு மனு  அளிக்க  வந்த அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

Published On :30 ஜூலை 2026, 3:02 am IST

அவிநாசி அருகேயுள்ள சின்னேரிபாளையம், அபிராமி காா்டன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சின்னேரிபாளையம் ஊராட்சி, அபிராமி காா்டன் பகுதியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நாள்தோறும் குடிநீா் விநியோகிக்கும் வகையில் டேங் ஆபரேட்டரை நியமித்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.

அபிராமி காா்டன் பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். இதேபோல, ருக்மணி காா்டன், அம்மன் நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் கெளரி மணி, ஒன்றியத் தலைவா் சித்ரா, துணைச் செயலாளா் தேவி, கிளைச் செயலாளா் கலைச்செல்வி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.