ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 1:01 am IST

முத்தூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

முத்தூா் - ஈரோடு சாலை, வேலாயுதம்பாளையம் நொய்யல் வீதியைச் சோ்ந்தவா் முருகன் (75). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை பணிக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, சாலையக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் முருகனின் வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்தியதாக தாராபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.