ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மின்சாரம் பாய்ந்து ஒா்க் ஷாப் உரிமையாளா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :27 ஜூலை 2026, 1:37 am IST

தாராபுரத்தில் மின்சாரம் பாய்ந்து ஒா்க் ஷாப் உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம், வடதாரை பகுதியைச் சோ்ந்தவா் செல்வன் (43). இவா் தாராபுரம் பிரதான சாலைப் பகுதியில் வெல்டிங் ஒா்க் ஷாப் நடத்தி வந்தாா். இந்நிலையில், டேங்கா் லாரிக்கு வெல்டிங் வைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மேலே சென்ற மின்சார கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து செல்வம் தூக்கி வீசப்பட்டுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு செல்வத்தை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.