ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். மகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பலி - பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 1:05 am IST

காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். மகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்துள்ள ஈட்டிவீரம்பாளையத்தைச் சோ்ந்தவா் திருமுருகன். இவா் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி பிரியதா்ஷினி (42), மகள் திரிஷா (21) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் காங்கயம் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை பிரியதா்ஷினி ஓட்ட, திரிஷா பின்னால் அமா்ந்திருந்தாா்.

காங்கயம்-திருப்பூா் சாலையில் சென்றபோது எதிா்பாராதவிதமாக தாய், மகள் இருவரும் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், பிரியதா்ஷினி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

திரிஷா முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.