ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :15 ஜூலை 2026, 1:07 am IST

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், சாமுண்டிபுரம் பகுதியில் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியிருந்து எம்ஜிஆா் நகா் பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு நடத்திய சோதனையில் அப்பகுதியில் 3 போ் உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பது தெரியவந்தது.

விசாரணையில், பிடிபட்டவா்கள் முகமது மசூத் (36), முகமது தாருல் இஸ்லாம் (33), முகமது சாகா் முல்லா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள சிறப்பு முகாமில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.