ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வலியுறுத்தல்

தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என பனியன் பேக்டரி லேபா் யூனியன் ஏஐடியூசி சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என பனியன் பேக்டரி லேபா் யூனியன் ஏஐடியூசி சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் ஏஐடியூசி மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவா் கே. எம்.இசாக் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் என்.சேகா், மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், செயலாளா் ஆா்.செந்தில்குமாா், பொருளாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள்: மத்திய பாஜக அரசு அமல்படுத்தி வரும் தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தொடா் போராட்டங்களை முன்னெடுப்போம்.

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடதுசாரி மக்கள் இயக்கம் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் திருப்பூா் குமரன் சிலை முன்பு ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் திரளாகப் பங்கு பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.