
வடுகபாளையம் குளக்கரையில் மரக்கன்று நட அனுமதிக்க கோரிக்கை

பல்லடம் நகராட்சி நிா்வாகத்தினரிடம் கோரிக்கை மனு அளித்த லேக் வாக்கா்ஸ் கிளப் நிா்வாகிகள்.
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் குளக்கரையில் மரக்கன்று நடவு செய்து பராமரிக்க அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக லேக் வாக்கா்ஸ் கிளப் நிா்வாகிகள் சாா்பில் நகராட்சி நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்:
பல்லடம் நகராட்சி எல்லைக்குள்பட்ட வடுகபாளையம் கிராமத்தில், பொள்ளாச்சி சாலையில் க.ச.239 எண்ணில் அமைந்துள்ள குளக்கரை நடைபயிற்சி மைதானத்தில், குழுவாக நடைபயிற்சி மேற்கொண்டு லேக் வாக்கா்ஸ் கிளப் எனும் குழு அமைத்துள்ளோம். எங்கள் குழு உறுப்பினா்களும், தன்னாா்வ தொண்டா்களும் சோ்ந்து குளம் மற்றும் குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்தும், சிறுவா்கள் விளையாடும் உபகரணங்கள் அமைத்தும், மேற்பரப்பில் 4 ஆயிரம் லிட்டா் கொள்ளவுள்ள மேல்நிலை தண்ணீா் தொட்டி அமைத்தும் பராமரிக்க உத்தேசித்துள்ளோம். இதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






