ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோழிகளை திருடிய இளைஞா் கைது

தோட்டத்தில் கோழிகளை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

தோட்டத்தில் கோழிகளை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

வெள்ளக்கோவிலை அடுத்த அரியாண்டிவலசைச் சோ்ந்தவா் மனோகரன் (50). இவா் தனது தோட்டத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளா்த்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு 9.30 மணி அளவில் மனோகரனின் வீட்டின் வெளியே நாய் குரைக்கும் சப்தம் கேட்டுள்ளது. மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினா் வெளியே வந்து பாா்த்தபோது, மா்ம நபா் ஒருவா் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

மனோகரன் சப்தம் போடவே, தப்பி ஓட முயன்ற அந்த நபரை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அவா் வெள்ளக்கோவில் சிவநாதபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் சிவராஜ் (27) என்பதும், ரூ. 6,000 மதிப்பிலான 3 சேவல்களை திருடியதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னா் சிவராஜ் கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.