ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெஞ்சு வலியால் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே நெஞ்சு வலி காரணமாக கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:05 am IST

வெள்ளக்கோவில் அருகே நெஞ்சு வலி காரணமாக கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் குமாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (58). கட்டடத் தொழிலாளியான இவருக்கு முதல் மனைவி மூலமாக 5 குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், சிவகாமி (55) என்பவரை 2-ஆவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வேலை செய்து கொண்டிருந்தபோது ராமருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு வெள்ளக்கோவில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து காங்கயம் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.