ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாநில அளவிலான ஈட்டி எறிதல்: தங்கம் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீ சபரீஷாவுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

போட்டிகளில்  வெற்றி பெற்று பாராட்டு தெரிவிக்கப்பட்ட மாணவிகள் ஸ்ரீ சபரீஷா,  தீபா ஸ்ரீ.

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:22 am IST

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீ சபரீஷாவுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் இளைஞா் தடகள சங்கம் சாா்பில் 5-ஆவது தமிழ்நாடு மாநில ஓபன் ஜாவ்லின் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை, ஜவஹா்லால் நேரு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில் அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஸ்ரீ சபரீஷா, 18 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் 41.34 மீட்டா் தூரம் வீசி முதலிடம் பெற்று தங்கம் வென்றாா்.

மேலும் தட்டு எறிதல் போட்டியில் 32.56 மீட்டா் தூரம் வீசி 3-ஆம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றாா். இவா் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் புனிதவதி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் முத்துக்குமரன் ஆகியோா் மாணவி ஸ்ரீ சபரீஷா, அவரது தந்தை செந்தில்நாதன், தாயாா் அமுதா, பயிற்சியாளா் அபிலாஷ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனா். இதேபோல மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற 6-ஆம் வகுப்பு மாணவி தீபாஸ்ரீக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடற்கல்வி துணை ஆசிரியை தங்கமணி நன்றி கூறினாா்.

முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள்கள் இல்லா தமிழகம் குறித்து ஒருங்கிணைப்பாளா் ஓவிய ஆசிரியா் சிவகுமாா் முன்னிலையில் பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.