ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 போ் கைது

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகர, வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இந்திரா நகா் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் வடக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பிரவீன்குமாா் (29) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் மொத்தம் 60 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

அதேபோல, திருப்பூா் மாநகர, மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாரப்பாளையம் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் மத்திய போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த முகமது அஜ்மீா் (22) என்பவரைப் பிடித்து சோதனை நடத்தியதில், அவரிடம் 101 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது அஜ்மீரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.