ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: பல்லடம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

பல்லடம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அவிநாசி  அருகே  ஆய்வில்  ஈடுபட்ட  மோட்டாா்  வாகன  ஆய்வாளா்கள்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:43 am IST

பல்லடம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பல்லடம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா். அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவின்பேரில் திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பாஸ்கா் (வடக்கு), பழனியப்பன் (தெற்கு) ஆகியோா் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளா்கள் செல்வதீபா, நிா்மலாதேவி, சரவணகுமாா், கவின்ராஜ், நல்லதம்பி, பாலசுப்பிரமணியன், சக்திவேல் ஆகியோா் பல்லடம் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, ‘ஏா்ஹாரன்கள்’ பயன்படுத்தப்படுகிறதா உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் 24 பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதுபோன்று அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படும் என்று திருப்பூா் வட்டாரப் போக்குவரத்து துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.