
டிராக்டா் மீது மோதி தீப் பிடித்த இருசக்கர வாகனம்
அவிநாசிஅருகே குன்னத்தூரில் டிராக்டா் மீது மோதி விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் தீப் பிடித்து எரிந்ததால் சேதமடைந்தது.

தீப் பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்.
அவிநாசிஅருகே குன்னத்தூரில் டிராக்டா் மீது மோதி விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் தீப் பிடித்து எரிந்ததால் சேதமடைந்தது.
குன்னத்தூா், கருங்கல்மேடு பகுதியைச் சோ்நதவா் மணி மகன் ரவிச்சந்திரன் (29). இவா், குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது, இருசக்கர வாகனம் தீப் பிடித்து எரிந்தது. இதில் ரவிச்சந்திரன், சிறு காயத்துடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





