காங்கயத்தில் ஒரே நாளில் 3 விபத்துகள்: 5 போ் படுகாயம்

விபத்து...
காங்கயம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நிகழ்ந்த 3 சாலை விபத்துகளில் 5 போ் படுகாயமடைந்தனா்.
காங்கயம் நகரம், அண்ணா நகா் பகுதி அருகே அகிலாண்டபுரம் செல்லும் சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது இருசக்கர வாகனம், லாரி ஆகிய வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவா் படுகாயமடைந்தாா்.
காங்கயம் அருகே, கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், காடையூா் அருகே உள்ள தவிட்டு மில் அருகே சென்ற இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த 2 போ் படுகாயமடைந்தனா்.
காங்கயம் அருகே கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வீரணம்பாளையம் பகுதி அருகே சென்ற காா் அருகில் இருந்த பேக்கரி கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கடை ஊழியா் ஒருவரும், வாடிக்கையாளரான பெண் ஒருவரும் பலத்த காயமடைந்தனா்.
இந்த விபத்து சம்பவங்களில் காயமடைந்தவா்களை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், 2 இருசக்கர வாகனங்களும், ஒரு காரும் சேதமடைந்தன. இந்த விபத்து சம்பவங்கள் குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






