முத்தூா் அருகே வேன் மோதி விவசாயி உயிரிழப்பு

துரைசாமி
முத்தூா் அருகே வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
முத்தூா் முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (71). இவரது மனைவி வள்ளியாத்தாள் (60). இவா்கள் இருவரும் சொந்த வேலையாக வீட்டிலிருந்து கடந்த 30-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனா். அப்போது முத்தூா் - நத்தக்காடையூா் சாலை சேரம்பாளையம் அருகே சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த சரக்கு வேன் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த துரைசாமி திருச்செங்கோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காயமடைந்த வள்ளியாத்தாள் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
உயிரிழந்த துரைசாமிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை செய்யும் மகன் செங்கோட்டையன் உள்ளாா். புகாரின்பேரில், சரக்கு வேன் ஓட்டுநா் ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த குணசேகரன் மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






