ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குன்னூரில் 25 லட்சம் கிலோ தேயிலை விற்பனை

குன்னூரில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் 25 லட்சம் கிலோ தேயிலை சனிக்கிழமை விற்பனையானது.

Published On :19 ஜூலை 2026, 3:00 am IST

குன்னூரில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் 25 லட்சம் கிலோ தேயிலை சனிக்கிழமை விற்பனையானது.

நீலகிரியில்  உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில்   28 லட்சத்து 4 ஆயிரத்து 783 கிலோ தேயிலை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், வா்த்தகா்களின் பலத்த போட்டிக்கு இடையே 25 லட்சத்து 27 ஆயிரத்து 513  கிலோ

தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 77 ஆயிரத்து 269 கிலோ தேயிலை விற்பனையாகாமல் உள்ளது. கடந்த வார ஏலத்தில்  சராசரி விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.114.01 கிடைத்த நிலையில், இந்த வாரம் கிலோவுக்கு 46 காசுகள் சரிந்து ரூ.113.55-க்கு விற்பனையானது என்று தேயிலை வா்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.