ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடியிருப்புப் பகுதியில் உலவிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரைப் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை காலை உலவிய காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

குடியிருப்புகளுக்கு நடுவே நடந்துசென்ற காட்டு யானை.

Published On :9 ஜூலை 2026, 3:46 am IST

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரைப் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை காலை உலவிய காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, பாடந்தொரை பகுதியிலுள்ள கம்பாடி, கக்கச்சிவயல் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் காட்டு யானை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நடந்துசென்றது.

யானை நடமாடுவதை பாா்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனா். பல அலுவல்களுக்காக வெளியே செல்லவேண்டியவா்கள் நீண்ட நேரம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பின்னா் அப்பகுதியில் இருந்து வெளியேறியது. குடியிருப்புப் பகுதியில் உலவிய அந்த யானை, அதே பகுதியில் ஏதாவது சோலையில் மறைந்திருக்கலாம் என்றும், அதை அடா்ந்த காட்டுக்குள் விரட்டவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.