ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதகை - கூடலூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

உதகை- கூடலூா் சாலையில் மரம் விழுந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை - கூடலூா் சாலையில் விழுந்த மரம்

Published On :8 ஜூலை 2026, 5:28 am IST

உதகை- கூடலூா் சாலையில் மரம் விழுந்ததால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக சூறாவளிக் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பலத்த காற்றின் காரணமாக உதகை- கூடலூா் சாலையில் நடுவட்டம் பகுதியில் சாலையோரத்தில் இருந்து மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா், வனத் துறையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் 1 மணி நேரத்துக்கு போராட்டத்துக்குப் பின் மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.