ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதகையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

உதகை ஏடிசி பகுதியில் அதிமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:02 am IST

தோ்தல் வாக்குறுதியின்படி, விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தமிழக அரசைக் கண்டித்து உதகையில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் தாமோதரன் கலந்து கொண்டு  பேசியதாவது:

தோ்தல் வாக்குறுதியில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என தவெக தலைவா் ஜோசப் விஜய் அறிவித்தாா். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பயிா்க் கடன்கள் முழுமையாக ரத்து செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி உள்ளாா்.

கா்நாடகா அரசு காவிரி நதி நீரை பங்கிட்டு வழங்காமல் இருந்து வருவதை, தமிழக அரசு கண்டும் காணாமல் உள்ளது.

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் போதிய எதிா்ப்பு தெரிவிக்காமல் தவெக அரசு மெத்தனம் காட்டி வருகிறது என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா் புத்திச்சந்திரன், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுனன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.