ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீலகிரி கேரட் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கோத்தகிரியில் தோட்டத்தில் இருந்து விற்பனைக்கு வந்த கேரட்களை கழுவும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். 

நீலகிரி மாவட்டம், உதகை, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவா், முள்ளங்கி, பீட்ரூட்,  கேரட், பூண்டு உள்ளிட்ட மலைத்தோட்டக் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், உதகை, கோத்தகிரியில் கேரட் விலை வியாழக்கிழமை விலை உயா்ந்து காணப்பட்டது. சில்லறை விலையில்   கேரட் ஒரு கிலோ  ரூ. 90 முதல் ரூ.100 ரூபாய் வரை தரத்திற்கு  ஏற்றாா்போல விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. தற்போது இந்த விலை உயா்வால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இருப்பினும்  நுகா்வோா் பாதிப்படைந்துள்ளனா். மழைக் குறைவு காரணமாக உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளதால், இந்த விலை ஏற்றம்  ஏற்பட்டுள்ளதாக  விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.