ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் செயல்படும் வணிக வளாகக் கடைகளை காலி செய்ய உத்தரவு

டால்பின்நோஸ் காட்சி முனைப் பகுதியில் உள்ள கடைகள்.

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் உள்ள 12 வணிக வளாகக் கடைகளை  காலி செய்ய வேண்டும் என்று பா்லியாறு ஊராட்சி சாா்பில் வியாபாரிகளுக்கு  நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தின்  முகப்பில் பா்லியாறு ஊராட்சிக்கு  சொந்தமான 12 வணிக  கடைகள் உள்ளன. இந்தக்  கடைகள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டநிலையில், கூடுதல் ஆட்சியா் உத்தரவின் படி  பழுது பாா்ப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனா்.

இதுதொடா்பாக பல முறை அறிவிப்பு கடிதம் வழங்கியும் வியாபாரிகள் பொருள்படுத்தாமலும், கடைகளை காலி செய்யாமலும், வாடகை தொகையை சரியாக செலுத்தாமலும் இருந்தனா்.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது, அதற்கான  உத்தரவு  பா்லியாறு ஊராட்சிக்கு  சில நாள்களுக்கு முன் கிடைத்தது. அதைத்தொடா்ந்து 12 கடை  வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடைகளை உடனடியாக காலி செய்ய  வேண்டும், தவறும்   பட்சத்தில் காவல் துறை பாதுகாப்போடு  கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா்லியாா் ஊராட்சி அதிகாரிகள்  தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.