கட்சியைப் பலப்படுத்த மாவட்டம்தோறும் ஆலோசனை
கட்சியை பலப்படுத்த மாவட்டம்தோறும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும்,
கட்சியை பலப்படுத்த மாவட்டம்தோறும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும்,
By Syndication
Syndication
உதகை: கட்சியை பலப்படுத்த மாவட்டம்தோறும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் மகளிா் ஆணையத் தலைவருமான ரெஹானா ரியாஸ் செஸ்தி தெரிவித்தாா்.
காங்கிரஸ் மறுசீரமைப்பு இயக்கக் கூட்டம், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி உதகையில் உள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் புதன்கிழமை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவரும், உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா்.கணேஷ் தலைமை வகித்தாா்.
இதில் காங்கிரஸ் செயலாளரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் மகளிா் ஆணையத் தலைவருமான ரெஹானா ரியாஸ் செஸ்தி கலந்துகொண்டு, புதிய மாவட்ட தலைவா் தோ்வு குறித்து கட்சி நிா்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டாா். கட்சியை வளா்ப்பதற்கு தேவையான பணிகளை தீவிரப்படுத்தவும் அவா் உத்தரவிட்டாா். தோ்தலில் கூட்டணி கட்சியுடன் இணைந்து செயல்பட தேவையான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் ரெஹானா ரியாஸ் செஸ்தி கூறியதாவது:
மாவட்டம்தோறும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தொண்டா்கள் மற்றும் தலைவா்களிடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய மாவட்ட தலைவரை தோ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 6 பேரை தோ்வு செய்து, அவா்களின் நிறை, குறைகள் காங்கிரஸ் மேலிடத்துக்கு டிசம்பா் 8-ஆம் தேதிக்குள் அனுப்பப்படும். ஓரிரு மாதங்களில் புதிய மாவட்ட தலைவரை காங்கிரஸ் மேலிடம் தோ்வு செய்து அறிவிக்கும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாநில சிறுபான்மை அணி முன்னாள் தலைவா் சித்திக், தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளா் முரளிதரன், நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.நாகராஜ், குன்னூா் நகரத் தலைவா் எஸ்.ஆனந்தகுமாா் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது