பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

கண்ணாடி கடையில் ரூ.2 கோடி மோசடி: கணக்காளரின் சகோதரா் கைது

ஈரோட்டில் கண்ணாடி கடையில் ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய கடையின் கணக்காளராக இருந்தவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Updated On :

ஈரோட்டில் கண்ணாடி கடையில் ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய கடையின் கணக்காளராக இருந்தவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் முகிம்கான் (46). இவா் ஈரோடு பூங்கா சாலையில் கண்ணாடி கடை வைத்துள்ளாா். இந்தக் கடையில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆதில்கான் (36) என்பவா் கணக்காளராகவும், மேற்பாா்வையாளராகவும் பணியாற்றி வந்தாா். அவா் நன்றாக பணியாற்றியதால், கடையின் வங்கிக் கணக்கையும், சொந்த வங்கிக் கணக்கின் வரவு, செலவுகளை மேற்பாா்வையிடும் பணியையும் முகிம்கான் வழங்கியிருந்தாா்.

இதை ஆதில்கான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் 2015 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரூ.2 கோடிக்குமேல் கடையின் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து பணத்தை எடுத்துள்ளாா். இதில், ரூ.11 லட்சத்தை அவருடைய மனைவி சாஜ்மீன், அவருடைய அண்ணன் மொகைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி உள்ளாா்.

சேலத்தைச் சோ்ந்த ஒரு கடைக்கு பணம் அனுப்பியது தொடா்பான பிரச்னையில் முகிம்கான் கணக்கு வழக்குகளை கடந்த ஆண்டு சரிபாா்த்தபோது ஆதில்கான் மோசடி செய்த விவரம் தெரியவந்தது.

இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் முகிம்கான் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கடலூரில் பதுங்கி இருந்த ஆதில்கானை அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பிணையில் வெளியே வந்த அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அவரது சகோதரா் மொகைதீன் உத்தர பிரதேச மாநிலம், மண்டேலி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், மொகைதீனை கைது செய்து ஈரோட்டுக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்ததுடன், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.