தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

தொழிலாளா் விதிகளை மீறிய 27 கடைகள் மீது நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் விதிகளை மீறியதாக கடந்த மாதத்தில் 27 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை - கோப்புப்படம்

Updated On :

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் விதிகளை மீறியதாக கடந்த மாதத்தில் 27 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜகுமாா் தலைமையில் மாவட்டத் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், சட்டமுறை எடை அளவு சட்டத்தின்கீழ் நகைக் கடைகள், ரேஷன் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எடைப் பாலங்கள், மளிகைக் கடைகள், வங்கிகள், தபால் நிலையங்கள், இரும்பு கடைகள் என மொத்தம் 232 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 21 கடைகளில் விதிமுறை மீறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல, பொட்டல பொருள்கள் விதிகளின்கீழ் மின் மற்றும் மின்னணு பொருள்கள், திரையரங்குகளில் உள்ள 72 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 5 கடைகளில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டது.

குழந்தை தொழிலாளா், வளரிளம் பருவ தொழிலாளா்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழித்தல் சட்டப்படி 84 நிறுவனங்களில் நடந்த கூட்டாய்வில், ஒரு வளரிளம் பருவ தொழிலாளா் கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டாா். கடந்த மாதம் மட்டும் விதிமுறைகளை மீறிய 27 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜகுமாா் கூறுகையில், எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்தக்கூடாது, பொட்டல பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது தண்டனைக்குரியதாகும்.

ஆய்வின்போது வேறுபாடுகள் கண்டறியப்பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் மீது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து வழங்கப்படும். குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் ‘1098’ என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.