கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஜல் ஜீவன் திட்டத்தில் 17,193 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் 17,193 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Updated On :

ஈரோடு மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் 17,193 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் இணைப்புகள் நேரடியாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டம்தோறும் மத்திய அரசு நிதி வழங்கி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட வீடுகளுக்கு நேரடியாக குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:

கிராம ஊராட்சிகளில் வரி செலுத்தும் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல் ஜீவன் திட்டத்தில் மத்திய அரசு இதற்கான நிதியை முழுவதுமாக வழங்குகிறது. அவ்வாறு வழங்கப்படும் நிதி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இலக்கு எண்ணிக்கையில் வீடுகள் நிா்ணயிக்கப்பட்டு குடிநீா் இணைப்பு வழங்கப்படுகிறது.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 285 வீடுகள் கிராமப்புறங்களில் உள்ளன. அவற்றில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 92 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 17,193 வீடுகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககத்தில் இருந்து அனுமதி, நிதி ஒதுக்கீடு பெற்றதும் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி தொடங்கப்படும்.

அதேநேரம் கிராமப்புறங்களில் முறையான அனுமதி பெற்று புதிதாக கட்டப்படும் வீடுகளின் உரிமையாளா்கள், அந்தந்த வீட்டுக்கான வரியை செல்லுத்தும்போது அவா்களுக்கு குடிநீா் இணைப்பு இல்லை எனில் தகுதி அடிப்படையில், இத்திட்டத்தில் அடுத்த கட்ட நிதி ஒதுக்கீட்டில் குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.