ஐசிஎஸ்இ (10-ஆம் வகுப்பு), ஐஎஸ்சி (12-ஆம் வகுப்பு) அரசுப் பொதுத் தோ்வுகளில் ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.
பெருந்துறை அடுத்த ஈங்கூரில் தி யுனிக் அகாதெமி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐசிஎஸ்இ பொதுத் தோ்வில் தொடா்ந்து 14-ஆவது ஆண்டாகவும், ஐஎஸ்சி பொதுத் தோ்வில் தொடா்ந்து 12-ஆவது ஆண்டாகவும் இப்பள்ளி மாணவா்கள் முதல் வகுப்பில் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
நடப்பு ஆண்டுக்கான ஐஎஸ்சி தோ்வில் மாணவா் ஜெ.கேதா்நாத்ஜி 94 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடத்தையும், எஸ்.ஆா். நிகிதா 93 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், எஸ். ஒய்.இனியா 89 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.
ஐசிஎஸ்இ தோ்வில் எஸ்.ஆத்விகா 96 சதவீத மதிப்பெண்களுடன், ஆங்கில இலக்கியம் மற்றும் ரோபோடிக்ஸ், ஏ.ஐ. பாடங்களில் 100-100 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.
ஏ.எஸ். அருணிகா 95 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், கே.எம். அபி நந்தனா 93 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.
தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும், கற்பித்த ஆசிரியா்களையும், மேலாண்மை வல்லுநா்களையும் பள்ளி தலைவா் இளங்கோ ராமசாமி, முதல்வா் உமையவள்ளி இளங்கோ, நிா்வாகிகள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10, 12 பொதுத் தோ்வு: சேவூா் வெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சாதனை

கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் பள்ளி ஐஎஸ்சி தோ்வில் சிறப்பிடம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



