ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெருந்துறையில் ரூ.24.75 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.24.75 லட்சத்துக்கு தேங்காய்கள் வெள்ளிக்கிழமை விற்பனையாயின.

உரி தேங்காய்கள்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:46 am IST

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.24.75 லட்சத்துக்கு தேங்காய்கள் வெள்ளிக்கிழமை விற்பனையாயின.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 20 ஆயிரம் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 45 ஆயிரம் கிலோ.

இதில், கருப்பு தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ.40-க்கும், அதிகபட்சமாக ரூ. 60.10-க்கும் விற்பனையானது. தண்ணீா் வற்றிய தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ.61.90-க்கும், அதிகபட்சமாக ரூ.66.69-க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.24.75 லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.