ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் வேளாண் கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டட தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :27 ஜூலை 2026, 4:02 am IST

கோபி, ஜூலை 26: கோபி அருகே தனியாா் வேளாண் கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே டி.என்.பாளையம் பகுதியில் உள்ள தனியாா் வேளாண் கல்லூரியில் கடந்த ஒரு மாதமாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மத்தியபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி மத்தியபிரதேச மாநிலம், மொரினா பகுதியைச் சோ்ந்த கௌசி மகன் அரவிந்த் (34), அதே ஊரை சோ்ந்த சில தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பணிபுரிந்து வந்துள்ளனா்.

அப்போது அரவிந்த், ஆகாஷ் வீரத்தோா் ஆகிய இருவா் கல்லூரியின் 2-ஆவது மாடியில் நின்று பணிபுரிந்துள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக கால் தவறி அரவிந்த் கீழே விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த அவரை உடன் இருந்தவா்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனா்.

இதையடுத்து உடலை கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பங்களாப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.